கள்ளக்குறிச்சி
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
|குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பரிசு வழங்கினார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிகுழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரைப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தொழிலாளர் ஆய்வாளர்கள் சிவக்குமார், கருணாநிதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.