< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கலெக்டர்
|15 Nov 2022 6:16 PM IST
kanchipuram District Collector congratulated the school students on Children’s Day
காஞ்சீபுரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்தார். குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பும், வாழ்த்துமடல்களும் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்தார். பின்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் மாவட்ட கலெக்டருக்கு மலர்கள் கொடுத்து வாழ்த்துகள் பெற்றனர். மேலும், நவம்பர் 20-ந் தேதி வரை குழந்தைகள் 'நண்பர்கள் வாரம்' என்ற தலைப்பில் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடவும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) யசோதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.