< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை..!
|24 Oct 2022 8:53 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று கோயம்பேடு சந்தை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டியம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இங்கு வருகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் பணி செய்து வரும் வியாபாரிகள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பதால் தீபாவளிக்கு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.