< Back
மாநில செய்திகள்
மதுரையில் குப்பை லாரியின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
மாநில செய்திகள்

மதுரையில் குப்பை லாரியின் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

Gokul Raj B
|
22 Oct 2022 6:40 PM IST

மதுரை,

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை லாரியின் பின்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியுள்ளது. இதனால் லாரி நிலை தடுமாறி ஒரு பக்கமாக சாயத்தொடங்கியது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரம் என்பதால், லாரி கவிழ்ந்து விபத்து ஏற்படும் சூழல் உருவானது.

இருப்பினும் நிலைமையை உணர்ந்து கொண்ட லாரி ஓட்டுநர், நிதானமாக செயல்பட்டு லாரியை மேம்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தினார். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயலால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே நேரத்தில் மேம்பாலத்தில் நின்ற குப்பை லாரியினால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்