< Back
மாநில செய்திகள்
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
30 Sept 2022 12:15 AM IST

பணியில் அலட்சியமாக செயல்பட்ட ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடமலையனூர் ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவர் சண்முகம். இவர் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை சரியாக மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பணியில் அலட்சியமாக சண்முகம் செயல்பட்டது தெரிந்தது. இதையடுத்து சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்