< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி
மதுரை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி

தினத்தந்தி
|
9 Sept 2022 1:40 AM IST

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி

மதுரை

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான ஓவிய போட்டிகள் நடந்தது. 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மரம் வளர்ப்போம், விவசாயம் காப்போம் என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எனது கனவு, எனது லட்சியம் என்ற தலைப்பில் ஓவிய போட்டிகள் நடந்தது. அருங்காட்சியாக காப்பாட்சியர் மருதுபாண்டியன் வரவேற்றார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்.வி.என்.கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் கலாராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

மேலும் செய்திகள்