< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீனவ பெண் கூட்டு பலாத்கார வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்: கொந்தளித்த எம்.எஸ்.பாஸ்கர்
|30 May 2022 3:16 PM IST
சென்னை,
ராமேஸ்வரம் மீனவ பெண் கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில், தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், போன் மோசடி, ஏடிஎம் கொள்ளை உள்பட சகல குற்றங்களிலும் வட இந்தியர்கள் கைவரிசை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், உச்சபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.