< Back
மாநில செய்திகள்
முட்டம் கடலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை...!
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

முட்டம் கடலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை...!

தினத்தந்தி
|
26 May 2022 11:15 AM IST

முட்டம் கடலில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் சகாய பிரான்சிஸ். இவரது மகன் ரோஹித்டோனி(வயது 15). இவர் அதே பகுதியை சேர்ந்த ஆண்டனிக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் மீன்பிடித்தொழிலாளர்களுடன் தொழிலுக்கு சென்று உள்ளார்

உடன் வடமாநில 4 தொழிலாளர்கள் உள்பட 18 தொழிலாளர்கள் சென்றனர். படகை பியஸ்(38)என்பவர் ஓட்டினார். படகு முட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்துல் செல்லும்போது ரோஹித்டோனி வலையை கடலில் வீசினார். அப்போது அவர் எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி கடலில் விழுந்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற தொழிலாளர்கள் கடலில் குதித்து சிறுவனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை

இந்த நிலையில் நேற்று மாலை சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து படகு ஓட்டுனர் பியஸ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்