< Back
மாநில செய்திகள்
போலீஸ்காரர் மீது தாக்குதல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

போலீஸ்காரர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
4 Aug 2023 1:46 AM IST

கபிஸ்தலத்தில் வாகன சோதனையின் போது போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கபிஸ்தலம் பாலக்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி டிரவைர் கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரம் மெயின் ரோட்டில் வசிக்கும் ரவி (வயது49) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ரவி, அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் பிரபு (42) என்பவரை தாக்கினார்.இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்