< Back
மாநில செய்திகள்
திருட்டை தடுத்த காவலாளி மீது தாக்குதல்
கடலூர்
மாநில செய்திகள்

திருட்டை தடுத்த காவலாளி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
20 July 2023 12:15 AM IST

சேத்தியாத்தோப்பு அருகே இரும்பு பொருட்களை திருட முயன்றதை தடுத்த காவலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேத்தியாத்தோப்பு,

சாலை விரிவாக்கப்பணி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராம பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் அதற்கு தேவையான இரும்பு உள்ளிட்ட பல்வேறு தளவாட பொருட்கள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை பாதுகாக்க அறந்தாங்கி கிராமத்தை சேர்ந்த மார்ட்டின்ராஜ்(வயது 35) என்பவர் உள்ளிட்ட சிலரை காவலாளியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நியமித்துள்ளனர்.

இரும்பு பொருட்களை திருட முயற்சி

நேற்று முன்தினம் இரவு மார்ட்டின்ராஜ் பாலம் கட்டும் இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மா்மநபர்கள் 2 பேர் இரும்பு பொருட்களை திருட முயன்றனர். இதைபார்த்த மார்ட்டின்ராஜ் அந்த நபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் மார்ட்டின்ராஜை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த காவலாளி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், இரும்பு பொருட்களை திருட முயன்றதை தடுத்த காவலாளியை தாக்கியது பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு மகன் ஆனந்தஜோதி (21), வீரமணி மகன் வீரபாண்டியன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்