< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜெப்ரானிக்ஸ் டிரிப் ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

ஜெப்ரானிக்ஸ் டிரிப் ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
14 July 2022 7:54 PM IST

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் டிரிப் என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

1.69 அங்குல சதுரமான டயலைக் கொண்டுள்ளது. இதன் மேல்பாகம் உலோகத்தினாலானது. உலோக ஸ்டிராப் மற்றும் காந்த சக்தி லூப் டிசைனைக் கொண்டது. இது கழற்றி, மாட்ட எளிதாக இருப்பதோடு அழகிய தோற்றமளிக்கவும் உதவுகிறது. ஒருங்கிணைந்த சென்சார் மூலம் பல பதிவுகளை இது துல்லியமாக காட்டுகிறது.

குறிப்பாக ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் காட்டும். 100-க்கும் மேற்பட்ட விளையாட்டுபோட்டிகள் குறித்த பதிவுகள் உள்ளன. ஐந்து நாட்களுக்கு தகவல்களை பதிவு செய்யும் வசதி உள்ளது. வழக்கமான பயன்பாட்டில் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.2,399.

மேலும் செய்திகள்