மேம்படுத்தப்பட்ட யமஹா பேசினோ மற்றும் ரே இஸட்.ஆர்
|இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் யமஹா நிறுவனம் தனது யமஹா பேசினோ மற்றும் ரே இசட்.ஆர். மாடல் ஸ்கூட்டர்களில் மேம்படுத்தப்பட்ட ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.
இது 125 சி.சி. திறன் கொண்ட ஹைபிரிட் மாடல் ஸ்கூட்டராகும். இதில் யூரோ 20 புகை விதியை பூர்த்தி செய்யும் என்ஜின் உள்ளது. இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. மேலும் யமஹா நிறுவனத்தின் ஒய் கனெக்ட் செயலி பொருத்தப்பட்டது. இது வாகனத்தின் செயல்பாடுகளை மிகத் துல்லியமாக உணர்த்தும். இரு சக்கர வாகனங்களிலேயே மிக மேம்பட்ட உயரிய தொழில் நுட்பம் உள்ள வாகனமாக இது விளங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நுகர்வு, பராமரிப்பு நினைவூட்டல், கடைசியாக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம், தவறாக செயல்பட்டால் அது குறித்த அறிவுறுத்தல், வாகனம் ஓட்டும் விதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். இவை கண்கவர் வண்ணங்களில் மட்டுமின்றி டிஸ்க் பிரேக் வசதி உள்ளதாகவும் வந்துள்ளது. பேசினோ எஸ் 125 எப்.ஐ. ஹைபிரிட் (டிஸ்க்) மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.91.030. ரே இசட்.ஆர் 125 எப்.ஐ. ஹைபிரிட் (டிஸ்க்) மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.89,530. ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 எப்.ஐ. ஹைபிரிட் (டிஸ்க்) மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.93,530.