< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜியோமி ஸ்மார்ட் டி.வி.
சிறப்புக் கட்டுரைகள்

ஜியோமி ஸ்மார்ட் டி.வி.

தினத்தந்தி
|
8 Sept 2022 6:51 PM IST

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜியோமி நிறுவனம் புதிதாக மூன்று மாடல் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை 43 அங்குலம், 50 அங்குலம் மற்றும் 55 அங்குல அளவுகளில் வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.28,999 முதல் ஆரம்பமாகிறது. 4-கே ரெசல்யூஷனில் காட்சிகள் மிகத் துல்லியமாகத் தெரியும். 30-க்கும் மேற்பட்ட ஓ.டி.டி. செயலிகள் இதில் உள்ளன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட இந்த ஸ்மார்ட் டி.வி.யில் குரோம் காஸ்ட் உள்ளீடாக வந்துள்ளது. குவாட் கோர் ஏ 55 பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம் 8 ஜி.பி. நினைவகம் கொண்டது.

எம்.ஐ. குரல் வழி ரிமோட் உள்ளது. இனிய இசையை வழங்க 30 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. 50 அங்குல மாடல் விலை சுமார் ரூ.34,999. 55 அங்குல மாடல் விலை சுமார் ரூ.39,999.

மேலும் செய்திகள்