< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஜியோமி ஸ்மார்ட் டி.வி.
|25 Aug 2022 9:54 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜியோமி நிறுவனம் புதிதாக 32 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
5 ஏ புரோ 32 என்ற பெயரில் வந்துள்ள இந்த டி.வி.யின் விலை சுமார் ரூ.16,999. இதில் விவிட் பிக்சர் என்ஜின் உள்ளதால் காட்சிகள் துல்லியமாகத் தெரியும். 24 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இவை இனிய இசையை வழங்கும்.
இதில் 1.5 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதனால் திரைப்படங்களை பதிவு செய்து தேவையான போது பார்த்து ரசிக்க முடியும். இதில் குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ 55 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு டி.வி. 11 இயங்குதளம் உள்ளது.