< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
விங்ஸ் பேண்டம் 700 வயர்லெஸ் இயர்போன்
|9 March 2023 8:52 PM IST
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் விங்ஸ் நிறுவனம் பேண்டம் 700 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை சுமார் ரூ.899. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 38 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. வீடியோகேம் விளையாடுவோருக்கு மிகவும் ஏற்றதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காதில் கச்சிதமாக பொருந்தும் வகையிலும், இடையூறின்றி இசையைக் கேட்டு ரசிக்கும் விதமாகவும் உருவாக்கப் பட்டுள்ளது.
ஒலி அளவை தேவைக்கேற்ப கட்டுப்படுத்தும் வசதி, குரல் வழி கட்டுப்பாடு வசதி மற்றும் வீடியோ கேமிற்கு மாறும் வசதி கொண்டது. சார்ஜிங் கேசில் ஆர்.ஜி.பி. விளக்கு உள்ளது. வியர்வை, தூசி புகாத தன்மை கொண்டது. 15 நிமிடம் சார்ஜ் செய்தாலே ஒரு மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது.