ஆண்கள் ஏன் பிரேஸ்லெட் அணிகிறார்கள்?
|ஆண்கள் கையில் பிரேஸ்லெட் அணிவது என்பது புதிய கலாச்சாரம் அல்ல; மிகவும் பழைய கலாச்சாரமாகும்.
அரசர்கள் காலத்திலும் இது இருந்துள்ளது. அதிர்ஷ்டத்துக்காகவும், தகுதியை காட்டுவதற்க்காகவும், அழகுக்காகவும் அணிந்து கொள்ளப்படுகிறது. வாட்ச் அணிவது போல இதையும் தினமும் அணிந்து கொள்ளலாம். தங்கம் வெள்ளி, செம்பு, ஸ்டீல், பஞ்சலோகம் போன்ற உலோகங்கள் மற்றும் தோல் போன்றவற்றில் பிரேஸ்லெட் செய்யப்படுகிறது. ஏன் ஆண்கள் கையில் பளபளப்பான பிரேஸ்லெட் அணிந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரங்களை காண்போம்.
ஒரு கூட்டத்தில் தனித்து தெரிய வேண்டும் என்றால் ஆடை அணிகலன்கள் ஒரு சிறந்த வழி. சிறந்த பிரேஸ்லெட் அனைவரின் கவனத்தை ஈர்க்க வல்லது. ஒரு பொது இடங்களில் நமக்கு அறிமுகம் இல்லாதவர் கூட நம்மிடம் வந்து பேச செய்யக் கூடியது. இதனால் புதிய நட்பு உருவாகும்.
பிரேஸ்லெட் அணிவது எண்ணங்களின் வெளிப்பாடாகும். ஒரே எண்ணம் கொண்ட மனிதர்களை எளிதில் கண்டு பழக உதவும்.
பிரேஸ்லெட் இறை நம்பிக்கைக்காகவும் அணிய படுகிறது. அந்த வகையில் மன உறுதியை அளிக்கிறது. சிலர் பாதுகாப்பு அளிப்பதாகவும், துணிவை அளிப்பதாகவும் கருதுகிறார்கள்.
அதிர்ஷ்டம் வருவதற்காக பிரேஸ்லெட் அணிந்து கொள்பவர்களும் உண்டு. தங்களுக்கு பிடித்த ஹீரோக்கள் பிரேஸ்லெட் அணிந்து கொண்டால் அதே பிரேஸ்லெட் வாங்கி அணிந்து கொள்பவர்களும் உண்டு.
சில குடும்பங்களில் பரம்பரையாக பிரேஸ்லெட் அணிவதை ஒரு வழக்கமாகவும் கொண்டுள்ளனர். அக்குடும்பங்களில் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பிரேஸ்லெட் அணியும் பழக்கம் ஏற்படுத்தப் படுகிறது.
சிலர் அழகுக்காக பிரேஸ்லெட் அணிகிறார்கள். அவர்கள் அணியும் ஆடையின் நிறத்திற்கு ஏற்றார் போல் வகை வகையாக பிரேஸ்லெட் அணிந்து கொள்வார்கள். அடர்த்தியான நிறத்தில் ஆடை அணியும் போது வெளிர் நிறத்தில் பிரேஸ்லெட் அணிந்து கொண்டால் தோற்றத்தை மேலும் அழகுபடுத்தும்.
சிலர் மருத்துவ காரணத்திற்காக பிரேஸ்லெட் அணிந்து கொள்கிறார்கள். எலும்பு தேய்மானம், மூடு வலி, செம்பால் செய்த பிரேஸ்லெட் அணிவார்கள். உடல் சூட்டை குறைப்பதற்கு வெள்ளி பிரேஸ்லெட் அணிவார்கள். வெள்ளி ஆயுளை கூட்டும் என்று சொல்லப் படுகிறது. தங்க பிரேஸ்லெட் நல்ல எண்ணங்களை உண்டாக்கும் என்றும் சொல்லப் படுகிறது. பஞ்சலோக பிரேஸ்லெட் அணிவதால் தீய சக்திகள் அண்டாது என்றும் பிராண சக்தி உடலில் பெருகும் என்றும் சொல்லப் படுகிறது.
ஒரு வகையில், பிரேஸ்லெட் அணிவது, ஆண்களின் உடல் மற்றும் மனம் சிறப்பாக இருக்க உதவுகிறது