< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் இந்து கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டது...! - மொத்தம் 5 பாகங்கள் -முழுவிவரம்
சிறப்புக் கட்டுரைகள்

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் இந்து கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டது...! - மொத்தம் 5 பாகங்கள் -முழுவிவரம்

தினத்தந்தி
|
30 Dec 2022 3:09 PM IST

உலக பாக்ஸ் ஆபீஸ் மன்னன் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' திரைப்பட வரிசையில் மேலும் 3 படங்கள் விரைவில் வர உள்ளன.

வாஷிங்டன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

ரூ 10 ஆயிரம் கோடி வசூல்

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது.

மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், அவதார் 2 வெளியான 12 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.10,100 கோடியையும் இந்தியாவில் ரூ.330 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிவேகமாக வசூலைக் குவித்துவரும் அவதார் 2 ரூ.15,000 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா என்பது பல கலைகளின் கலவை. இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரும் தங்கள் கலையை சிறந்த முறையில் முன்வைத்தால் ஒரு நல்ல படம் உருவாகிறது.

கற்பனையின் உச்சம்


சினிமாவில் தன் கற்பனையால் பொறாமைப்பட வைத்தவர் ஒருவர்.சக்சல் ஜேம்ஸ் கேமரூன்.மிகவும் புதுமையான சிந்தனைகளும் மேக்கிங் ஸ்டைலும் கேமரூனை வித்தியாசப்படுத்துகிறது.

டெர்மினேட்டர், ஆக்ஷன் படங்களில் புதுமை புகுத்தி, டைட்டானிக், அவதார் போன்ற ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் கேமரூனுக்கு கற்பனைக்கு எடுத்துக்காட்டு

அவதார் முதல் பாகத்தை பார்க்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள்.அதிக பாராட்டுகளை பெற்ற படத்திற்கு விமர்சனங்கள் உண்டு.உலகிலேயே அதிக வசூல் படமாக வர இந்த படத்தில் என்ன இருக்கிறது..? ஆரம்பம் முதல் இறுதி வரை விஎப் எக்ஸ் காட்சியமைப்புகள் இருக்கிறது என கூறுவார்கள்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்குநராகவும், பொறியாளராகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அசாதாரன கற்பனைத் திறனும், இயக்குனராகத் திகழும் திறமையும் உள்ள ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட படத்தை உருவாக்க முடியும்.

ஜேம்ஸ் கேமரூன் இளமைப்பருவம்

ஜேம்ஸ் கேமரூன் 1954 இல் கனடாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிலிப் கேமரூனின் மூத்த மகனாகப் பிறந்தார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். பின்னர் ஜேம்ஸ் தனது 17வது வயதில் குடும்பத்துடன் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தார்.படிப்பின் போது சாதாரண மாணவராக இருந்தார்.தனியாக இருந்த கேமரூன் கல்லூரியை பாதியில் நிறுத்திவிட்டு வேறு வேலைகளுக்கு திரும்பினார்.

லாரி ஓட்டுநராக இருந்து, துப்புரவுப் பணியாளராக இருந்து, ஓய்வு நேரத்தில் எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டார்.இந்தக் காலக்கட்டத்தில்தான் திரைப்பட மோகம் தலைதூக்கியது.


நூலகங்களில் இருந்து ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பற்றிய பல புத்தகங்களைப் படித்து திரைப்பட நுட்பங்களைப் பற்றிய அறிவைப் வளர்த்து கொண்டார். கேமரூன், டிரக் டிரைவர் வேலையை விட்டுவிட்டு ஹாலிவுட்டில் நுழைந்தார். படம் எடுக்கும் ஆசையில், ஒரு அறிவியல் புனைகதை குறும்படத்தை உருவாக்கத் தொடங்கினார். கடன் வாங்கி ஜீனோஜெனிசிஸ் என்ற குறும் படத்தை இயக்கினார்.பின் கலை இயக்குனராக, புரொடக்ஷன் டிசைனர், ஸ்பெஷல் எபெக்ட் டைரக்டர் என பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்தார்.

பிரன்ஹா

அப்போதுதான் அவருக்கு 1978 ஆம் ஆண்டு 'பிரன்ஹா' இரண்டாம் பாகத்தில் இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.படத்தின் தயாரிப்பாளரும், அசல் இயக்குனரும் மறைந்த போது கேமரூனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.அவர் இரண்டரை வாரங்களுக்குப் பிறகு இத்தாலிய தயாரிப்பாளர் ஓவிடியோ ஜி. அசோனிடிஸ் என்பவரால் பணிநீக்கம் செய்யப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

பிரன்ஹா படப்பிடிப்பின் போது, அவருக்கு இரவில் காய்ச்சல் ஏற்பட்டது மற்றும் அவரைக் கொல்ல எதிர்காலத்தில் இருந்து வரும் ரோபோவைப் பற்றி கனவு கண்டார்.அதை வைத்து டெர்மினேட்டருக்கான திரைக்கதையை எழுதினார். அந்த திரக்கதையுடன் கேமரூன் பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகினார்.

ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஸ்கிரிப்டை வாங்க ஆர்வமாக இருந்தனர், ஆனால் இயக்குனராக அவரை போன்ற ஒரு புதுமுகத்தை வைத்துக்கொள்ள தயாராக இல்லை.கேமரூன் அவரை இயக்குனராக்கும் ஒப்பந்தத்துடன் ஸ்கிரிப்டை ஒரு டாலருக்கு விற்றார்.

டெர்மினேட்டர்

கேமரூன் தான் டெர்மினேட்டர் படத்தில் அர்னால்டை நடிக்க வைத்தார். வில்லன் சைபோர்க் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.டெர்மினேட்டர் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து தவறான எண்ணங்களையும் சுக்குநூறாக்கினார். அந்தப்படம் ஒரு அலையை உருவாக்கியது.மிகவும் குறைந்த செலவில் தயாரித்த படம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

டெர்மினேட்டர் 2 பல வசூல் சாதனைகளை முறியடித்து ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் மைல் கல்லாக அமைந்தது.கேமரூனின் சிறப்பான இயக்கம், புதுமையான கதை, அர்னால்டின் அசாத்தியமான நடிப்பு, திரைக்கதை என ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அப்போது கேமரூனின் அடுத்த மாஸ்டர் பீஸ் பிறந்தது. நெஞ்சை தொடும் வகையில் கதை சொன்ன படம் 'டைட்டானிக்'. உலகையே உலுக்கிய டைட்டானிக் பேரழிவின் பின்னணியில் உருவான காதல் கதை ஹாலிவுட் வரலாற்றில் இடம்பிடித்தது.

வசூல் சாதனை

1997ல் வெளியான டைட்டானிக் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து உலக அளவில் அதிக வசூல் செய்த படம். ஹாலிவுட் மட்டுமின்றி, ஜப்பான், சீன, ஐரோப்பிய திரையுலகிலும் டைட்டானிக் ஹிட் அடித்தது.

சாதாரண ஹாலிவுட் படங்களை பார்க்காதவர்கள் கூட டைட்டானிக் பார்க்க உலகம் முழுவதும் தியேட்டர்களில் குவிந்தனர்.அது ஆச்சரியமாக இருந்தது.சேர்ந்து. , டைட்டானிக் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

டைட்டானிக்கில் ஜாக் & ரோஸ் காதல் என்பது கேமரூனின் கற்பனையில் உருவானது என்பது பலருக்குத் தெரியாது. அதேபோல் ஜாக் படத்தில் வரும் ஹீரோயின் ரோஸின் கரி ஓவியத்தை வரைகிறார். உண்மையில் கேமரூன் தான் இப்படத்திற்கு வரைந்தார்.

10 வருடங்கள் காத்திருப்பு...

டைட்டானிக்கிற்கு பிறகு 10 வருடங்கள் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி இருந்த கேமரூன், அவதார் என்ற விஷுவல் படத்தை தயார் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

கேமரூன் தனது பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்க மீண்டும் வர வேண்டியதாயிற்று.

2009ல் வெளியான அவதார் தான் முதலில் 2 பில்லியன் டாலர் வசூலித்தது. அவதார் கையாண்ட கதையும் அரசியலும் பொருத்தமாக இருந்தது.

அவதார் என்பது ஜேம்ஸ் கேமரூன் மட்டுமே செய்திருக்கக்கூடிய ஒன்று என்று அந்தப் படத்தை ஆழமாகப் பார்க்கும் எவருக்கும் புரியும்.

டைட்டானிக்


கேமரூன் உலக சினிமாவின் பொறியாளர் என்று வர்ணிக்கப்படுகிறார்.அவர் தனது கனவுத் திட்டமான டைட்டானிக்கின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு, அவரது கைகளில் அவதாரின் முழு ஸ்கிரிப்ட் இருந்தது. ஆனால் அதற்கு தொழில்நுட்ப வாய்ப்பு இல்லை...அது 1990களின் ஆரம்பம்.

அதனால் தான் டைட்டானிக்கை தொடங்கினாஎ...அதுவரை இருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது...கேமரூனின் கனவு அவதார்...அவரது அடுத்த படம் டைட்டானிக்கை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது பிடிவாதம்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு, அவதாருக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் அவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டன.

புதுமையான கேமரா அமைப்பு

கேமரூன் அவதாருக்கு ஒரு புதுமையான கேமரா அமைப்பை உருவாக்கினார், இது ஒரு கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை இஅவருக்கு சொந்தமாக்கியது.

கேமரூன் வேண்டுமானால் ஸ்கிரிப்ட் தயாரானபோது அவதாரைச் செய்திருக்கலாம்... ஆனால் இன்று வெளியாகும் பல ஹாலிவுட் படங்களை விட அது நன்றாக இருந்திருக்கும்... ஆனால் அவரது படம் தரத்தில் குறையக் கூடாது... பார்வையாளர்கள் மறக்கக் கூடாது என்ற பிடிவாதம் இருந்தது.

அவருடைய பல வருடக் காத்திருப்பையும் உழைப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவதார் படம் தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதனின் ஆணவத்தைத் தாண்டி மனித சமூகத்தின் முடிவில்லா துயரத்தின் கதையைச் சொல்கிறது.

பண்டோரா கிரகம்


பண்டோரா கிரகத்தின் மிகப்பெரிய கனிம வளங்களை கையகப்படுத்தவும், அதை ஆக்கிரமித்து காலனியாக மாற்றவும் மனிதர்கள் எடுக்கும் முயற்சிகளையும், அதற்கு எதிராக கடற்படையினர் சண்டையிடுவதையும் படம் கூறுகிறது.

கதை 2154 இல் நடைபெறுகிறது. மனிதர்களுக்கு தேவையான விலைமதிப்பற்ற தாது பண்டோராவின் இருண்ட காடுகளில் மறைந்துள்ளது.

நடிகர்களின் உடல் பாகங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவர்களின் இயக்கங்கள் மற்றும் வெளிப்பாடுகள் டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றப்படும் இ-கேப்ச்சர் மற்றும் டிஜிட்டல் 3டி அமைப்புகளைப் பயன்படுத்தி அவதார் படமாக்கப்பட்டது. மேலும் அவதாருக்கு முன்னும் பின்னும் எந்த படமும் மோஷன் கேப்சர் முறையை இவ்வளவு திறம்பட பயன்படுத்தவில்லை...

அதில் பயன்படுத்தப்பட்ட நாவி மொழி கேமரூன் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டது.

இதனுடைய 2ம் பாகம் தான் அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர்.


அவதார் 5 பாகங்கள்

கேமரூன் அவதார் படத்தின் நான்கு பாகங்களை உருவாக்க உள்ளார். அவற்றில் இரண்டை முழுமையாக படமாக்கியுள்ளார் ("அவதார்:2 தி வே ஆஃப் வாட்டர்" மற்றும் "அவதார் 3" ) அவதார் 4 படத்தின் சில பகுதிகளும் படமாக்கப்பட்டுள்ளன. கேமரூனின் திட்டத்தின் படி நடந்தால், "அவதார் 4" தயாரிப்பை முடித்து, "அவதார் 5" முழுவதுமாக படமாக்கப்படும்.

அவதார் வரிசையின் அடுத்த படத்தின் தலைப்பு அவதார் 3: தி சீட் பேரர் என்று கூறப்படுகிறது.இந்த மூன்று தலைப்புகளில் இது மிகவும் தனித்துவமான தலைப்பு மற்றும் இதைப் பற்றி யாரும் யூகிக்க முடியாது. நான்காவது தி துல்கின் ரைடர் என்றும் ஐந்தாவது தி குவெஸ்ட் பார் எய்வா என்றும் கூறப்படுகிறது.

68 வயதான கேமரூன் தனது வாழ்நாள் முழுவதும் "அவதார்" திரைப்படங்களை மட்டுமே இயக்குவார் என்று கூறினால் போதுமானது.


எஸ்.எஸ்.ராஜமவுலி

எம்பயர் இதழின் ௨பிரபல டைரக்டர்களின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரூன், "அவதார்" திரைப்படங்களில் உருவாக்க போதுமான கதைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளன என்று கூறினார்.

நிகழ்ச்சியில் "ஆர்ஆர்ஆர்" இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கேள்வி எழுப்பும் போது நீங்கள் சொல்ல விரும்பும் இன்னும் பல கதைகள்/ஐடியாக்கள் உங்களிடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று கேட்டார்.

"வணக்கம், எஸ்.எஸ். உங்கள் கேள்விக்கு பதில் இரண்டு சிந்தனைகள்: முதலாவது, 'அவதார்' உலகம் மிகவும் பரந்து விரிந்து கிடக்கிறது, அதில் நான் சொல்ல விரும்பும் பெரும்பாலான கதைகளை என்னால் சொல்ல முடியும் மற்றும் பல ஸ்டைலிஸ்டிக் நுட்பங்களை முயற்சிக்க முடியும்.

இரண்டாவதாக, ஆம்... கலைஞர்களாகிய எங்கள் நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நான் உருவாக்க முடியாத சில கதைகளுக்காக நான் எப்போதும் வருத்தப்படுவேன்.

எதிர்காலத்தில் நான் போற்றும் இயக்குனர்களுடன் அதிக ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறேன் என கூறினார்.


இந்து சமயமும் அவதார் படமும்...!

அதே சமயம் 12 வருடங்களுக்கு முன் அவதார் வெளி வந்தபோது ஜேம்ஸ் கேமரூன் 2010 ஆம் ஆண்டு ஆன் தி கோச் வித் கோயல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது.

நிகழ்ச்சியில் 'அவதார்' என்ற வார்த்தை என்ன அர்த்தம் என்று கோயல் கேட்டபோது, அது ஒரு இந்து வார்த்தை என ஜேம்ஸ் கூறினார்.

மேலும் "நான் இந்து மதத்தை மிகவும் வசீகரமாக காண்கிறேன். அவதார் பரந்த அளவிலான மக்களின் ஆன்மீகத்தை தொடும் ஒரு படம்," என்று அவர் கூறினார்.

"நான் இந்து மதத்தால் ஈர்க்கப்பட்டேன். அற்புதமான புராண மனிதர்கள் மற்றும் வண்ணங்கள் மற்றும் காட்சிகள் தெளிவானவைகளாக தெரிகிறது என கூறி இருந்தார்.


மேலும் செய்திகள்