< Back
சிறப்புக் கட்டுரைகள்
மலைப்பாம்பிடம் சிக்கி உயிருக்கு போராடிய ஆடு..! துணிச்சலுடன் காப்பாற்றிய சிறுவர்கள்... வைரல் வீடியோ
சிறப்புக் கட்டுரைகள்

மலைப்பாம்பிடம் சிக்கி உயிருக்கு போராடிய ஆடு..! துணிச்சலுடன் காப்பாற்றிய சிறுவர்கள்... வைரல் வீடியோ

தினத்தந்தி
|
17 Nov 2022 11:45 AM IST

ஆடு ஒன்று மலைப்பாம்பிடம் சிக்கி கதறிய நிலையில், சிறுவர்கள் துணிச்சலுடன் பாம்பின் அருகே சென்று ஆட்டை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

மலைப்பாம்புகள் பாம்பு வகைகளில் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். பிற பாம்புகளை போல் அல்லாமல் இவை தனது இரையைக் கொல்ல தனது ஒட்டுமொத்த உடல்சக்தியை பயன்படுத்தும்.

அதாவது ஒரு இறையை கண்டால், இவை அதனை தனது பெரிய உடலை பயன்படுத்தி இறையை முழுவதுமாக சுற்றிக்கொள்கிறது. பின்னர் இறையை இறுக்குவதன் மூலம் அதனை உயிரிழக்கச்செய்கிறது.

வலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இறை உயிரிழந்த பிறகு அதனை அப்படியே முழுவதுமாக விழுங்கிவிடுகிறது. இந்த மலைப்பாம்புகளிடம் பெரும்பாலும் ஆடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்கள் சிக்கிக்கொள்கின்றன.

அந்த வகையில், ஆடு ஒன்றை மலைப்பாம்பு ஒன்று விழுங்குவதற்காக அதனை சுருட்டிய நிலையில், சிறுவர்கள் சிலர் ஆட்டினை காப்பாற்றியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை வாஜே என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் மலைப்பாம்பு ஒன்று ஆடு ஒன்றை தனது இறையாக்குவதற்காக ஆட்டினை சுற்றுக்கொள்கிறது. பாம்பிடம் இருந்து விடுபடுவதற்காக அந்த ஆடு தன்னோடு பாம்பையும் சேர்த்துக்கொண்டு ஓடுகிறது. ஆனால் மலைப்பாம்போ ஆட்டை விடுவதாக இல்லை.

சிறிது நேரத்திற்குள் ஆட்டினை முழுவதுமாக பாம்பு சுற்றிக்கொண்டது. இதனால், வலியால் ஆடு கத்திய நிலையில், அருகில் இருந்த சிறுவர்கள் சிலர் பாம்பிடம் இருந்து ஆட்டை மிட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவர் பாம்பின் தலையையும், மற்றொருவர் அதன் வாலையும் பிடித்து இழுத்து ஆட்டினை பத்திரமாக மீட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர், சிறுவர்களின் துணிச்சலை பாராட்டினையும், மற்றும் சிலர், வீடியோ எடுப்பதற்காக சிறுவர்கள் வேண்டுமென்றே இதனை அரங்கேற்றியுள்ளனர் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்