மனைவி பயணித்த விமானத்தில் பைலட் ஆக பணியாற்றிய கணவன்! ஆச்சரியத்தில் உறைந்த மனைவி - வைரல் வீடியோ
|விமானியின் மனைவி, தனது கணவர் பைலட்டாக பணியாற்றும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தில் தன் மனைவியை வித்தியாசமாக வரவேற்ற விமானியின் வீடியோ அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்பை,
இன்டிகோ விமானத்தில் பணியாற்றி வரும் விமானியின் மனைவி, தனது கணவர் பைலட்டாக பணியாற்றும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தில் தன் மனைவியை வித்தியாசமாக வரவேற்ற விமானியின் வீடியோ அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது.
கேப்டன் அல்னீஸ் விரானி என்ற இன்டிகோ விமான பைலட், விமானத்தின் பொது அறிவிப்பு முறையைப் பயன்படுத்தி தனது மனைவியை வரவேற்ற வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
எனது மனைவியை மும்பைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லும் பாக்கியம் தனக்கு இருப்பதாக அவர் கூறி வரவேற்றார்.
கேப்டன் அல்னீஸ் விரானி பேசும்போது, அவரது மனைவி ஜஹ்ரா தனது உற்சாகத்தை கேமராவில் பதிவு செய்து, பின்னர் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதற்கு அவரது மனைவி ஜஹ்ரா தனது கணவருக்கு நன்றியையும் தெரிவித்தார். இந்த மனிதனுக்கு தகுதியுடையளாக மாற, நான் என் வாழ்க்கையில் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
கேப்டன் விராணியின் மனைவி ஜஹ்ரா, விமானத்தில் ஏறும்போது, கேப்டன் விராணியிடம் கை அசைப்பதையும், விரானி அதை விமானிகள் அறையின் ஜன்னல் வழியாக ஏற்றுக்கொள்வதையும் வீடியோ காட்டுகிறது.
பின்னர் சஹ்ரா விமானத்தில் தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவரது கணவர் திடீரென்று மைக் வாயிலாக பயணிகளிடம் பேச ஆரம்பித்தார்.
அவர் கூறியதாவது, "இந்த விமானத்தில் உங்களுடன் ஒரு சிறப்பு பயணி இருக்கிறார். எனது மனைவியை இந்த விமானத்தில் மும்பைக்கு அழைத்து செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இது மற்றவர்களுக்கும் ஒரு சிறிய விஷயம், ஆனால் எனக்கு நிறைய அர்த்தம் உள்ள ஒன்று. விமானத்தில் உள்ள உங்கள் அனைவருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை 9.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.