போக்ஸ்வேகன் வெர்டுஸ்
|போக்ஸ்வேகன் நிறுவனம் வெர்டுஸ் மாடல் காரை அறிமுகப் படுத்தியுள்ளது.
அடிப்படை மாடல் 1 லிட்டர் 3 சிலிண்டர் டி.எஸ்.ஐ. என்ஜினைக் கொண்டதாகவும், பிரீமியம் மாடல் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. ஜி.டி. என்ஜினை கொண்டதாகவும் வந்துள்ளது. அடிப்படை மாடல் 115 ஹெச்.பி. திறனையும், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.
டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 6 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாடல்கள் வந்துள்ளன. இதேபோல 1.5 லிட்டர் மாடல் நான்கு சிலிண்டர் டர்போ என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. இதில் 7 கியர்கள் உள்ளன. இது வென்டோ மாடலை விட அளவில் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 10 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டமும், 8 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் உள்ளது. வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி கொண்டது. காற்றோட்ட வசதியுள்ள இருக்கைகள், திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். தானியங்கி முகப்பு விளக்கு மற்றும் மழை உணர் வைபர் இதில் உள்ளன. பொருட்களை வைக்க 521 லிட்டர் இட வசதி மற்றும் பின் இருக்கைகளை மடக்கி மேலும் பொருட் களை வைக்கும் வசதி இதில் உள்ளது.