போக்ஸ்வேகன் டிகுயான் எக்ஸ்குளூசிவ் எடிஷன்
|பிரீமியம், சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் போக்ஸ்வேகன் நிறுவனத் தயாரிப்புகளில் டிகுயான் மாடல் மிகவும் பிரபலமாகும்.
இதில் தற்போது எக்ஸ்குளூசிவ் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 2 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினைக் கொண்டுள்ளது. இதில் 7 கியர்கள் உள்ளன. இது 190 பி.எஸ். திறன் மற்றும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். எக்ஸ்குளூசிவ் மாடல் வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இதில் அடாப்டிவ் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் முகப்பு விளக்கு உள்ளது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள விளக்குகள் செயற்கை உணர் திறன் கொண்டவை. சாலையின் விளக்கு வெளிச்சத்திற்கேற்ப விளக்குகளின் ஒளி அளவை தானாக மாற்றிக்கொண்டு ஓட்டும் அனுபவத்தை மிகச் சிறப்பானதாக்கும். இதில் 20.32 செ.மீ. அளவிலான தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மொபைல் போனுக்கு சார்ஜிங் `சி' போர்ட் உள்ளது. உள்புற வெளிச்சம் 30 வண்ணங் களில் உள்ளதால், தேவைக் கேற்றதை தேர்வு செய்யலாம்.
பலவித செயல்பாடுகளை உள்ளடக்கிய ஸ்டீயரிங், மூன்று நிலைகளிலான ஏர் கண்டிஷனிங் வசதி, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். பாதுகாப்பு அம்சமாக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. இதில் உள்ள ரிவர்ஸ் கேமரா நான்கு வித கோணங்களில் பின்புற அமைப்பை வெளிப்படுத்தும்.
ஏ.பி.எஸ்., இ.எஸ்.சி., ஏ.எஸ்.ஆர்., இ.டி.எல்., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், டார்க் கண்ட்ரோல், குழந்தைகளுக்கேற்ற ஐசோபிக்ஸ் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.