< Back
சிறப்புக் கட்டுரைகள்
விவோ ஒய் 35 ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

விவோ ஒய் 35 ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
8 Sep 2022 12:26 PM GMT

விவோ நிறுவனம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஒய் 35 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.58 முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இது 4-ஜி ஸ்மார்ட்போனாகும். இதில் குவால்காம் ஸ்நாப் டிராகன் 680 எஸ்.ஓ.சி. பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 44 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு மற்றும் தங்க நிறத்தில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.18,499.

மேலும் செய்திகள்