< Back
சிறப்புக் கட்டுரைகள்
விவோ வி 27, வி 27 புரோ
சிறப்புக் கட்டுரைகள்

விவோ வி 27, வி 27 புரோ

தினத்தந்தி
|
17 March 2023 4:58 PM IST

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் விவோ நிறுவனம் வி சீரிஸில் புதிதாக வி 27 மற்றும் வி 27 புரோ ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இவை 6.78 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டவை. ஆட்டோ போகஸ் கேமராவுடன் கூடிய இந்த மாடலின் விலை சுமார் ரூ.32,999 முதல் ஆரம்பமாகிறது.

மீடியாடெக் டைமென்சிடி 7200 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இந்த கேமராவில் சோனி ஐ.எம்.எக்ஸ்.766 வி. சென்சார் உள்ளது. இவற்றில் 8 ஜி.பி. ரேம், 12 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. திரையி லேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,600 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 66 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட வி 27 புரோ மாடலின் விலை சுமார் ரூ.37,999. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடலின் விலை சுமார் ரூ.39,999. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடலின் விலை சுமார் ரூ.42,999. இதில் வி 27 மாடலில் 256 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.36,999.

மேலும் செய்திகள்