வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். ஸ்போர்ட்
|வெஸ்பா ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் பியாஜியோ நிறுவனம் தற்போது எஸ்.எக்ஸ்.எல். ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மிட்நைட் டெசர்ட், ஜேட் ஸ்ட்ரீக், சன்னி எஸ்கேப்டு டஸ்கானி சன்செட் ஆகிய புதிய நான்கு வண்ணங்களில் இது வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.33,403. பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.1,53,023 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய நிறுவனமான பியாஜியோ அங்கு பிரபலமாக விளங்கும் நிறங்களில் சிறந்த செயல்திறன் கொண்ட மாடல்களை இந்தியச் சந்தையிலும் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில் இந்த ஸ்போர்ட் மாடல் அறிமுகமாகியுள்ளது.
இது 124.45 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டது. 9.92 பி.எஸ். திறனையும், 9.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இது 47.75 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. 7.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. சி.பி.எஸ். பிரேக் சிஸ்டம் கொண்டது.