< Back
சிறப்புக் கட்டுரைகள்
வெப் ஓ.எஸ். ஸ்மார்ட் டி.வி.
சிறப்புக் கட்டுரைகள்

வெப் ஓ.எஸ். ஸ்மார்ட் டி.வி.

தினத்தந்தி
|
8 Dec 2022 9:25 AM GMT

வெய்ரா குழுமம் புதிதாக வெப் இயங்கு தளம் கொண்ட ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

வெப் ஸ்மார்ட் டெலிவிஷன்களில் எல்.ஜி. குழுமத் தயாரிப்புகள் பிரபலமாக விளங்குகின்றன. தற்போது வெய்ரா குழும தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 32 அங்குலம் முதல் 65 அங்குல அளவுகளில் இது கிடைக்கும்.

நெட்பிளிக்ஸ், ஹுலூ, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ், யூ-டியூப், பியூபோ டி.வி. ஆகியவற்றின் இயங்குதளம் இதில் செயல்படுவதற்கு இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இத்தகைய டி.வி.யை பயன்படுத்துவோர் முன்னணி வெப் நிகழ்ச்சிகளை இடையூறின்றி கண்டு மகிழலாம்.

மேலும் செய்திகள்