மேம்பட்ட அம்சங்களுடன் டி.வி.எஸ். ரெய்டர்
|இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது ரெய்டர் மாடல் மோட்டார் சைக்கிளாகும்.
தற்போது எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இதில் மேம்பட்ட அம்சங்கள் பொருத்தப்பட்ட புதிய மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 5 அங்குல டி.எப்.டி. திரை முன்பகுதியில் பல்வேறு தொழில் நுட்ப வசதிகள் கொண்டதாக பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகள் குறித்த அறிவுறுத்தல், வானிலை முன்னறிவிப்பு, பெட்ரோல் தீர்ந்து போவது, பாதைக்கான வழி வரைபட விவரம் உள்ளிட்ட அனைத்தும் இதில் தெரியும். எரி பொருள் தீரும் சமயத்தில் அருகில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற் கான வழியையும் இது காட்டிவிடும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இது செயல்படும். இதனால் விருப்பமான பாடல்களை நீங்கள் சொன்னாலே உங்கள் மொபைலில் உள்ள அந்த பாடலை இது இசைக்கச் செய்யும். தொடு திரையின் வெளிச்சத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது. இது 124.8 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜினைக் கொண்டது.
இது 11.4 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப் படுத்தும். 5 கியர்களைக் கொண்டது. இதில் இரண்டு விதமான ஓட்டும் நிலை கள் (பவர், எகோ) உள்ளன. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க்கும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.99,990. கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் வந்துள்ளது.