< Back
சிறப்புக் கட்டுரைகள்
புதிய வண்ணத்தில் டி.வி.எஸ். என் டார்க்
சிறப்புக் கட்டுரைகள்

புதிய வண்ணத்தில் டி.வி.எஸ். என் டார்க்

தினத்தந்தி
|
22 Sept 2022 9:26 PM IST

இரு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது என் டார்க்.

இந்த மாடல் தற்போது கண்கவர் நீல வண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.87,011. ரேஸ் எடிஷனாக வந்துள்ள இந்த மாடலில் நீல வண்ணம் கிராபிக் டிசைனைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 124.8 சி.சி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது.

இதில் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் மாடலும் கிடைக்கிறது. இது 9.4 ஹெச்.பி. திறன் மற்றும் 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. இதில் ரேஸ் எக்ஸ்.பி. மாடல் 102 ஹெச்.பி. திறனையும், 10.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் டி.எப்.டி. டிஸ்பிளே வசதியுடன் இது வந்துள்ளது.

மேலும் செய்திகள்