டி.வி.எஸ். அபாச்சே ஆர்.டி.ஆர் 160 ஸ்பெஷல் எடிஷன்
|டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தயாரிப்புகளில் இளைஞர் களை அதிகம் கவரும் மோட்டார் சைக்கிளாகத் திகழ்வது அபாச்சே. இதில் ஆர்.டி.ஆர் 160 4 வி மாடலில் ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உறுதியான அதேசமயம் எடை குறைந்ததாக எக்ஸாஸ்ட் பைப் உள்ளதால் வாகனத்தின் எடை ஒரு கிலோ குறைந்துள்ளது. அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், இரு வண்ண இருக்கைகள், வெள்ளை நிறம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,30,090.
இது 159.7 சி.சி. திறன் கொண்ட எஸ்.ஓ.ஹெச்.சி. என்ஜினைக் கொண்டது. 17.55 பி.எஸ். திறனை 9,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இது5 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. மூன்று விதமான ஓட்டும் நிலைகளை (அர்பன், ஸ்போர்ட் மற்றும் மழைக்காலம்) கொண்டது.
டி.வி.எஸ். ஸ்மார்ட் கனெக்ட் செயலியுடன் இணைத்து செயல்படுத்தலாம். எந்த கியரில் வாகனம் செல்கிறது என்பதை உணர்த்தும் இன்டிகேட்டர், எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.