< Back
சிறப்புக் கட்டுரைகள்
டிரையம்ப் குரோம் எடிஷன் அறிமுகம்
சிறப்புக் கட்டுரைகள்

டிரையம்ப் குரோம் எடிஷன் அறிமுகம்

தினத்தந்தி
|
3 Nov 2022 2:32 PM GMT

பிரீமியம் சொகுசு மாடல் மோட்டார் சைக்கிளில் மிகவும் பிரபலமானது டிரையம்ப் மோட்டார் சைக்கிளாகும். இந்நிறுவனம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற மாடல்களில் குரோம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

1937-ம் ஆண்டு முதல் பிரபலமான ஸ்பீடு டுவின் மாடலும், 1960-களில் வெளிவந்த டிரிடோன்ஸ் மாடலும் தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக குரோம் எடிஷ னாக வந்துள்ளது. மொத்தம் 8 லிமிடெட் எடிஷன் மாடலை இந்நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த மாடல்கள் அனைத்துமே ஓராண்டுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ராக்கெட் 3 ஆர் குரோம் எடிஷன் மாடலைப் பொறுத்த மட்டில் இதன் பெட்ரோல் டேங்க் குரோமியத்தால் ஆனது. வாகனம் முழுவதும் கருப்பு நிறத்திலும், டேங்க் குரோமியத்தால் ஆனதால் மிகவும் எடுப்பான தோற்றத்திலும் இது ஜொலிக்கிறது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.20.80 லட்சம். இதேபோல ராக்கெட் 3 ஜி.டி. குரோம் எடிஷன் மாடலில் பெட்ரோல் டேங்க் வித்தியாசமான வடிவமைப்பிலும், ஆங்காங்கே சிவப்பு நிற கோடுகளைக் கொண்டதாகவும் உள்ளது.

கருப்பு நிற பின்புலம் கொண்ட முகப்பு விளக்கு, மட்கார்டு, ரேடியேட்டர், பக்கவாட்டு பேனல்கள் அனைத்தும் கருமை நிறத்தில் இதற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.21.40 லட்சம்.

அடுத்ததாக போனவிலே டி 120 குரோம் எடிஷன் மாடலும் நீல வண்ணத்தில், கருப்பு நிற மட்கார்டுகளைக் கொண்ட தாக வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.11.89 லட்சம். இத்துடன் போனவிலே பாபர் குரோம் எடிஷன் மாடல் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.12.85 லட்சம். போனவிலே ஸ்பீட் மாஸ்டர் குரோம் எடிஷன் மாடலின் விலையும் சுமார் ரூ.12.85 லட்சம். போனவிலே டி 100 குரோம் எடிஷன் மாடலின் விலை சுமார் ரூ.10.04 லட்சம். ஸ்பீடு டுவின் 900 குரோம் எடிஷன் மாடல் சுமார் ரூ.8.84 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது.

ஸ்கிராம்பிளர் 900 குரோம் எடிஷன் மாடல் விலை சுமார் ரூ.9.94 லட்சம். இவை அனைத்துமே கண் கவர் வண்ணங்களில் சிறப்பு குரோம் எடிஷனாக வெளிவந்துள்ளன.

மேலும் செய்திகள்