< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டொயோட்டா ஹைகிராஸ் அறிமுகம்
|5 Jan 2023 3:03 PM IST
டொயோட்டா நிறுவனம் உயர் தரத்திலான ஹைகிராஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை ரூ.18.30 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.28.97 லட்சம். இது ஹைகிராஸ் மாடலில் 5-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். 2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 183.7 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும்.
இதில் சி.வி.டி. மாடல் 171.6 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். எஸ்.யு.வி. மாடலில் இது எரிபொருள் சிக்கனமானது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 16.13 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இது வாகனம் ஓடும்போதே பேட்டரி சார்ஜ் ஆகும் வகையிலான ஹைபிரிட் மாடலாகும்.