< Back
சிறப்புக் கட்டுரைகள்
டொயோடாவின் புதிய இனோவா ஹைகிராஸ்
சிறப்புக் கட்டுரைகள்

டொயோடாவின் புதிய இனோவா ஹைகிராஸ்

தினத்தந்தி
|
8 Dec 2022 3:45 PM IST

டொயோடா நிறுவனம் புதிதாக இனோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

5-வது தலைமுறையைச் சேர்ந்த இந்த மாடல் வாகனம் ஓடும்போதே பேட்டரியில் மின்திறனை சேமிக்கும் வசதி கொண்ட ஹைபிரிட் மாடலாகும். இதில் பாதுகாப்பு அம்சமாக டொயோடா சேப்டி சென்ஸ் நுட்பம் உள்ளது. இந்தியாவில் இத்தகைய நுட்பம் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது 2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 137 கிலோ வாட் திறனை வெளிப்படுத்தும். திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, தாமாக எரியும் முகப்பு விளக்கு, இரட்டை செயல்பாடு கொண்ட பகலில் ஒளிரும் விளக்கு உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. உள்புறம் டி.எப்.டி. திரை, டிரைவர் இருக்கை நிலை நினைவக வசதி, 10.1 அங்குல திரையுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், சப் ஊபருடன் 9 ஜே.பி.எல். ஸ்பீக்கர் கொண்டது.

லேன் டிராக் அசிஸ்ட், பின்புறம் வாகன நெரிசலை அறிவுறுத்தும், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை, 6 ஏர் பேக், பின் சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக், ஸ்டெபிளிடி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

மேலும் செய்திகள்