< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
தோஷிபா கியூலெட் டி.வி. அறிமுகம்
|5 Aug 2022 8:32 PM IST
தோஷிபா நிறுவனம் 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட கியூலெட் டி.வி.யை சி 350 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் கூகுள் டி.வி. இயங்குதளம் உள்ளது. ரெக்ஸா என்ஜின், டால்பி விஷன் அட்மோஸ் ஆகியன உள்ளன. இது 43 அங்குலம் மற்றும் 55 அங்குல அளவுகளில் வந்துள்ளன. இதில் உள்ள ரெக்ஸா என்ஜின் தொழில் நுட்பமானது இயற்கை காட்சிகளின் நிறம் முற்றிலும் மாறாமல் அப்படியே வெளிப்படும்.
இதில் மூன்றுவித நிலைகளில் காட்சிகளைப் பார்க்கலாம். கூகுள் அசிஸ்ட், குரோம்காஸ்ட், மிராகாஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன. நெட்பிளிக்ஸ், யூ-டியூப், பிரைம் வீடியோ, ஹாட் ஸ்டார், சோனி லிவ், ஹங்கமா, ஜியோ சினிமா, ஜீ 5, ஈரோஸ் நவ் ஆகிய செயலிகள் இதில் உள்ளன. இனிய இசையை வழங்க 24 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. 43 அங்குல மாடல் விலை சுமார் ரூ.29,990. 55 அங்குல மாடல் விலை சுமார் ரூ.54,990.