< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
கால்நடை மருத்துவர்களுக்கு வேலை
|27 Nov 2022 3:38 PM IST
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் 731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கால்நடை அறிவியல் (பி.வி.எஸ்சி) இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழை ஒரு மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்கவும் வேண்டும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் கால்நடை மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும்.
தமிழ் தகுதி தேர்வு, கால்நடை அறிவியல் சார்ந்த எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-12-2022.
விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://www.tnpsc.gov.in என்ற இணையபக்கத்தை பார்வையிடலாம்.