சிறப்புக் கட்டுரைகள்
நாசா கணித்ததை விட சூரியன் இயங்கும் வேகம் அதிகரிப்பு - சூரிய சுழற்சியால் பூமிக்கு பாதிப்பு!
சிறப்புக் கட்டுரைகள்

நாசா கணித்ததை விட சூரியன் இயங்கும் வேகம் அதிகரிப்பு - சூரிய சுழற்சியால் பூமிக்கு பாதிப்பு!

தினத்தந்தி
|
8 Aug 2022 5:01 PM IST

ஒவ்வொரு 11 வருடங்களுக்கும், சூரியனின் வட மற்றும் தென் துருவங்கள் இடங்களை மாற்றுகின்றன.

வாஷிங்டன்,

பூமி திடீரென வேகமாக சுழல்வது மட்டுமின்றி, நாசா கணித்ததை விடவும் சூரியன் வேகமாக இயங்கி வருகிறது.

சூரியனைப் பற்றி புரிந்து கொள்ளவும் எவ்வாறு தோன்றியது உள்ளிட்ட பல அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்ள சூரிய சுழற்சி முறை என்பது கணக்கிடப்படுகிறது. சூரியனுக்கும் பூமியை போன்று ஒரு சுழற்சி உள்ளது. அதனை சூரிய வட்டம் அல்லது சூரிய சுழற்சி முறை எனப்படுகிறது.

ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் இது கணக்கிடப்படும். அதீத வெப்பத்தால் உருவாகும் பொருட்கள் ஆகியவற்றை அண்டத்தில் விண்வெளியில் சிதறவிடும். அவை பல லட்சம் மைல்கள் பயணித்து ஆங்காங்கே சென்றடையும்.

அதன் தாக்கம் பூமியிலும் பெரும் அளவில் ஏற்படும். இந்த சூரிய சுழற்சி அதன் 11 வது ஆண்டை நெருங்கும் போது வீரியம் நிறைந்ததாக இருக்கும். சூரியனிலிருந்து பல்வேறு பொருட்கள் அலைகள் அண்டத்தில் வெளியேறும். வரும் 2025 ஆம் ஆண்டு ஒரு சூரிய சுழற்சி ஆண்டு முடிகிறது. இதன் காரணமாக இப்போது இருந்தே அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும், சூரியனில் எத்தனை சூரிய புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் கணக்கிட்டு அதன் செயல்பாடு கண்காணிக்கப்படும். இது 1755 இல் இருந்து செய்யப்படுகிறது. அப்படி பார்த்தால், இது சூரிய சுழற்சி 1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

25வது சோலார் சுழற்சி, டிசம்பர் 2019 இல் தொடங்கியது. இதன் உச்சபட்ச தாக்கம், நவம்பர் 2024 மற்றும் மார்ச் 2026 ஆகிய காலகட்டத்திற்கு இடையில் நடக்கும், பெரும்பாலும் ஜூலை 2025இல் இதன் உச்சபட்ச தாக்கம் இருக்கும் என கணக்கிடப்பட்டது.

ஆனால், இப்போது சூரியனில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான சூரிய புள்ளிகள் காரணமாக, "சோலார் சுழற்சியின் உச்சகட்ட தாக்கம்" மிக வேகமாக, நவம்பர் 2024இல் ஏற்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த விண்வெளி நிகழ்வால், பூமியை நோக்கி பாதிப்பு வரும் போது, ரேடியோ சிக்னல்களில் குறுக்கீடுகள், மின் கட்டங்களில் அலைகள், ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களுக்கு சேதம் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்கலங்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து அல்லது சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

25வது சோலார் சுழற்சியை கண்காணிக்க அமைக்கப்பட்ட "சோலார் சைக்கிள் 25 கணிப்பு குழு" - நாசா மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) இணைந்து நிதியுதவி செய்த சர்வதேச நிபுணர்களின் குழுவினர் கணித்ததை காட்டிலும் சூரியனில் இம்முறை அதிக சூரிய புள்ளிகள் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் (NCAR) விஞ்ஞானிகள் குழு கணித்தபடியே, சூரியனில் இம்முறை அதிக சூரிய புள்ளிகள் ஏற்படலாம் என்பது உண்மையாகி வருகின்றது.


சூரியனின் காந்தப்புலமானது, சூரிய சுழற்சி எனப்படும் சுழற்சியின் வழியாக செல்கிறது. ஒவ்வொரு 11 வருடங்களுக்கும், சூரியனின் காந்தப்புலம் முற்றிலும் புரட்டுகிறது. இதன் பொருள் சூரியனின் வட மற்றும் தென் துருவங்கள் இடங்களை மாற்றுகின்றன. சூரியனின் வட மற்றும் தென் துருவங்கள் மீண்டும் புரட்ட சுமார் 11 ஆண்டுகள் ஆகும்.

2001ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, சூரியனிலிருந்து வெளியேறிய இதுவரை இல்லாத மிகப்பெரிய எரி பிழம்பு (மணிக்கு 7.2 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில்) பதிவு செய்யப்பட்டது.

இத்தகைய சமயத்தில் சூரியனில் கடும் வெப்பம் ஏற்பட்டு அதன் பரப்பில் ஆங்காங்கே பிளம்புகள் பள்ளங்கள் ஏற்படும். சூரியனிலிருந்து வெடித்த சிதறும் பொருட்கள் விண்வெளியில் பரவி இருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சூரியனில் இருந்து 35 வெளியேற்றங்கள் நடந்துள்ளதாகவும், 14 பெரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 6 பெரிய தீ பந்துகள் வெளியேறி இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்