< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஆடி ஏ 8 எல் அறிமுகம்
சிறப்புக் கட்டுரைகள்

ஆடி ஏ 8 எல் அறிமுகம்

தினத்தந்தி
|
21 July 2022 12:33 PM GMT

பிரீமியம் மற்றும் சொகுசு கார்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள ஆடி நிறுவனம் தற்போது ஏ 8 எல் மாடல் கார்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

ஸ்போர்டியர் தோற்றத்திலான ஒற்றை பிரேம் கிரில், ஒருங்கிணைந்த வடிவம் ஆகியன இதற்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது. இதில் திறன் மிக்க 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 48 வோல்ட் ஹைபிரிட் என்ஜினுடன் வந்துள்ளது. இது 340 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 5.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும்.

இதில் டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. முகப்பு விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புற இருக்கைகள் சாய்வு நாற்காலி போல சாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. இதனால் நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு தோன்றாது. அதேபோல கால்களுக்கு வெதுவெதுப்பான சூட்டில் மசாஜ் தரும் வகையிலான வசதியும் இதில் உள்ளது. காற்று சுத்திகரிப்பான், பின்னிருக்கை பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கென என்டர் டெயின்மென்ட் சிஸ்டம், 3 டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் 1,920 வாட் திறனை வெளிப்படுத்த 23 ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆக்டிவ் ஏர் சஸ்பென்ஷன், அனைத்து சக்கர சுழற்சி, பார்க் அசிஸ்ட், 360 டிகிரி சுழலும் கேமரா உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. 8 கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். இதில் இரண்டு வேரியன்ட்கள் வந்துள்ளன. செலிபிரேஷன் எடிஷன் மாடல் 5 பேர் பயணிக்கும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது.

இது 340 ஹெச்.பி. திறன் மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1.57 கோடி. நான்கு நிலைகளிலான ஏ.சி. காரை எப்போதுமே குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் வசதி, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை ஆகிய வசதிகளைக் கொண்டது. பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 10 ஏர் பேக்குகள் இதில் உள்ளன.

மேலும் செய்திகள்