< Back
சிறப்புக் கட்டுரைகள்
டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
28 July 2022 1:34 PM GMT

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டிரான்சியான் நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 9 என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.6 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 37 பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம் மற்றும் 5 ஜி.பி. வர்ச்சுவல் ரேம் கொண்டதாக வந்துள்ளது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டதாகவும், 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உடையதாக வும் இது வந்துள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.8,499. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.9,499.

மேலும் செய்திகள்