< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
பான்டம் எக்ஸ் 2 புரோ
|27 Jan 2023 9:34 PM IST
டெக்னோ நிறுவனம் பான்டம் எக்ஸ் 2 புரோ என்ற பெயரில் அழகிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் முதல் முறையாக உள்ளிழுக்கக் கூடிய போர்ட்ரேட் லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகவும் மெல்லிய வடிவில் இதை வடிவமைக்க வழி ஏற் பட்டுள்ளது. இது 6.8 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.
இதில் 5160 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்கவர் ஆரஞ்சு வண்ணத்தில் பைபரால் ஆன பின்புறத்தைக் கொண்டதாக இது வந்துள்ளது. இதில் 48 சதவீத பொருட்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாகங்களைக் கொண்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.49,999.