< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டி.சி.எல். ஸ்மார்ட் டி.வி.
|7 March 2023 7:18 PM IST
டி.சி.எல். நிறுவனம் 32 அங்குல அளவிலான ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. எஸ் சீரிஸில் மூன்று மாடல்கள் (எஸ் 5400, எஸ் 5400 ஏ மற்றும் எஸ் 5403 ஏ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்திலும் 24 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இது டால்பி ஆடியோ சிஸ்டமாகும். அத்துடன் உள்ளீடாக 16 ஜி.பி. நினைவகம் உள்ளது. இது கூகுள் டி.வி. இணைப்பு கொண்டது.
இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உடைய டி.வி.யாகும். அறையின் வெளிச்சத்துக்கு ஏற்ப காட்சிகளின் வெளிச்ச அளவை தானியங்கி முறையில் இது கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும். வை-பை, புளூடூத் இணைப்பு வசதி, யு.எஸ்.பி. 2.0 இணைப்பு வசதி கொண்டது. இசையைப் பொருத்தமட்டில் 7 விதமான தேர்வு நிலைகள் (ஸ்டாண்டர்டு, டைனமிக், மியூசிக், திரைப்படம், குரல் வழி கட்டுப்பாடு, வீடியோ கேம் மற்றும் விளையாட்டு) உள்ளன. 32 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.15,990.