< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
டாடா டிகோர் எக்ஸ்.எம்
|18 Aug 2022 5:31 PM IST
டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது டிகோர் மாடலாகும்.
இதில் தற்போது எக்ஸ்.எம். என்ற புதிய வேரியன்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சி.என்.ஜி.யில் செயல்படக் கூடியது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.7,39,900. மேம்பட்ட செயல்பாடு, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவுத் திறன் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கொண்டது. பொழுதுபோக்கிற்காக ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் 4 ஸ்பீக்கர்களைக் கொண்டதாக இதில் இடம்பெற்றுள்ளது.
பேட்டரியில் இயங்கும் ஜன்னல் கதவுகள், ஒருங்கிணைந்த மைய பூட்டும் வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டது. வெள்ளை, கிரே, நீலம், சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது. இதில் மேனுவல் கியர் மாடலும் ஆட்டோமேடிக் கியர் மாடலும் வந்துள்ளது.