டியாகோ என்.ஆர்.ஜி. எக்ஸ்.டி
|இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் டியாகோ என்.ஆர்.ஜி. மாடல் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதாகும்.
இது அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டாகிறது. அதைக் கொண்டாடும் விதமாக இதே பிரிவில் டியாகோ என்.ஆர்.ஜி. எக்ஸ்.டி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.6.42 லட்சம்.
இது எஸ்.யு.வி. மாடலைப் போலிருப்பதால் இதற்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. அத்துடன் பாதுகாப்பு அம்சங்களில் 4 நட்சத்திர குறியீட்டைப் பெற்றிருப்பதும் வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த நம்பகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட என்.ஆர்.ஜி. எக்ஸ்.டி. மாடல் 14 அங்குல ஹைபர் ஸ்டைல் சக்கரங்களைக் கொண்டுள்ளது.
இதில் 7 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இனிய இசையை வழங்க ஹர்மான் டி.எம். உள்ளது. அனைத்து கண்ட்ரோல் வசதியும் ஸ்டீயரிங் சக்கரத்திலேயே உள்ளது. டிரைவர் சீட் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, முன்புற பனிப்பொழிவிலும் அதிக வெளிச்சத்தை பரப்பும் விளக்கு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கருப்பு வண்ணத்திலான மேற்கூரை இதன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பின்புற கேமரா மற்றும் 4 டுவீட்டர்கள் உள்ளன. வெள்ளை, கிரே, அரிசோனா நீலம், பிளேம் சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும்.