< Back
சிறப்புக் கட்டுரைகள்
டாடா பஞ்ச் கேமோ எடிஷன் அறிமுகம்
சிறப்புக் கட்டுரைகள்

டாடா பஞ்ச் கேமோ எடிஷன் அறிமுகம்

தினத்தந்தி
|
29 Sept 2022 3:01 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மாடல் காரில் கேமோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அடர் பச்சை வண்ணத்தில் இது வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.6.85 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.8.63 லட்சம். காஸிரங்கா எடிஷனைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பு எடிஷனாக கேமோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

இது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட தாக வந்துள்ளது. 86 ஹெச்.பி. திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு ஹாரியர் மாடலில் கேமோ எடிஷனை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருந்தது. தற்போது பஞ்ச் மாடலிலும் அறிமுகம் செய்துள்ளது. இது இரட்டை வண்ணத்தில் அதாவது மேற்கூரை கருப்பு அல்லது வெள்ளை வண்ணத்தில் கிடைக்கும்.

முன்புற கிரில் கருப்பு வண்ணத்திலும், சில்வர் வண்ணத்தில் ஸ்கிட் பிளேட் மற்றும் பம்பரும் உள்ளது. உள்புறத்தில் டேஷ் போர்டு பச்சை வண்ணத்திலும், இருக்கைகள் புதிய வண்ணத் திலும் உள்ளன. இதில் 7 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி உள்ளது. 16 அங்குல அலாய் சக்கரம், பார்க்கிங் கேமரா, பகலில் ஒளிரும் எல்.இ.டி. (டி.ஆர்.எல்.) விளக்கு, ஸ்டாப்-ஸ்டார்ட் பொத்தான், குரூயிஸ் கண்ட்ரோல், முன்புற பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.

இது 5 கியர்களைக் கொண்ட 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. பஞ்ச் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த சிறப்பு எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்