< Back
சிறப்புக் கட்டுரைகள்
நெக்ஸான் ரெட் டார்க் எடிஷன் அறிமுகம்
சிறப்புக் கட்டுரைகள்

நெக்ஸான் ரெட் டார்க் எடிஷன் அறிமுகம்

தினத்தந்தி
|
7 March 2023 3:17 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரெட் டார்க் எடிஷன் நெக்ஸான் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.12.35 லட்சம் முதல் சுமார் ரூ.14.35 லட்சம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி கார்களைத் தயாரிப்பதோடு சிறப்பு எடிஷனையும் அறிமுகம் செய்வதில் முன்னோடியாக திகழ்கிறது.

ரெட் டார்க் எடிஷனை டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த போது இதற்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இது தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு வண்ணம் ஒளிரும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் உள்ளதைப் போன்றே உள்ளேயும் டேஷ்போர்டு கருப்பு நிறத்திலும், இருக்கைகள் சிவப்பு நிறத்திலும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டேஷ்போர்டில் 7 அங்குல தொடு திரை உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளது. கனெக்டட் கார் டெக் செயலி மூலம் இணைப்பு பெறலாம். வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர் வசதி கொண்டது. பயணிகள் பாதுகாப்புக் கென முன்புறம் இரட்டை ஏர் பேக் உள்ளது. அத்துடன் ஏ.பி.எஸ்., இ.பி.டி. மற்றும் பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல் வசதி உள்ளது. இது 120 பி.எஸ். திறனை வெளிப்படுத்தும் வகையில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடலும், 110 பி.எஸ். திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்ட மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.

மேனுவல் கியர் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி (ஏ.எம்.டி.) கொண்ட மாடல்கள் வந்துள்ளன. இதில் விருப்ப மானதை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஹாரியர் மற்றும் சபாரி மாடலிலும் ரெட் டார்க் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவ்விரண்டு மாடலி லும் ஏ.டி.ஏ.எஸ். வசதி கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விரு மாடலிலும் டிரைவர் சீட் பெல்ட் இயக்கம் குறித்த நினைவு வசதி உள்ளது.

மேலும் செய்திகள்