< Back
சிறப்புக் கட்டுரைகள்
நெக்சான் இ.வி. பிரைம்
சிறப்புக் கட்டுரைகள்

நெக்சான் இ.வி. பிரைம்

தினத்தந்தி
|
21 July 2022 6:32 PM IST

வாகனத் தயாரிப்பில் முன்னணியில் திகழும் இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது நெக்சான் மாடலில் இ.வி. பிரைம் என்ற புதிய மேம்பட்ட காரை அறிமுகம் செய்துள்ளது.

இது பிரீமியம் ரகமாக பல்வேறு சிறப்பம்சங் களைக் கொண்டதாக வந்துள்ளது. தானியங்கி பிரேக் விளக்கு, குரூயிஸ் கண்ட்ரோல், மறைமுக டயர் காற்றழுத்த கண்காணிப்பு வசதி (ஐ.டி.பி.எம்.எஸ்.), ஸ்மார்ட் கடிகாரத்துடன் இணைந்த ஒருங்கிணைப்பு வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பேட்டரி கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை அளிப்பதாக இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்.யு.வி. மாடலில் வந்துள்ள இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கி.மீ. தூரம் வரை ஓடும். சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் கரியமில வாயு வெளியேற்றம் முற்றிலும் கிடையாது.

இதில் 129 பி.எஸ். திறனை வெளிப்படுத்தும் காந்த விசை கொண்ட ஏ.சி. மோட்டார் உள்ளது. இதில் 30.2 கிலோவாட் அவர் லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீர் புகாத வகையில் பேக் செய்யப்பட்டுள்ளது.

இதில் செயலி அடிப்படையிலான 35 வகையான சிறப்பு செயல்பாடுகள் உள்ளன. தொலை தூரத்திலிருந்து காரின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது, கார் எங்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வசதி, டிரைவர் ஓட்டும் திறனை பகுப்பாய்வு செய்வது, செல்லும் பாதை ஆகிய வசதிகளை செயலி மூலமாக மேற்கொள்ள முடியும். நீலம், வெள்ளை மற்றும் கிரே உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.14.99 லட்சம் முதல் சுமார் ரூ.17.50 லட்சம் வரையாகும். இதில் மொத்தம் 5 வேரியன்ட்கள் வந்துள்ளன.

மேலும் செய்திகள்