டாடா டிகோர் இ.வி.
|டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வாகனங்களைத் தயாரிப்பதில் தற்போது தீவிர கவனம் செலுத்துகிறது. தனது பிரபலமான மாடல்களில் பேட்டரியில் இயங்கும் கார்களை இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது டிகோர் இ.வி. மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு சோதிக்கப்பட்டதில் 315 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. பன்முக ஓட்டும் வசதி, செயலி இணைப்பு வசதி, டயர் பஞ்சர் ஆனால் அதை சரி செய்துகொள்ள தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மழை உணர் வைபர், தானாக இரவில் எரியும் முகப்பு விளக்கு, குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. ஸ்மார்ட்போன் மூலமான செயலி மூலம் பல மேம்பட்ட வசதிகளையும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் அளித்துள்ளது.
எக்ஸ்.இ., எக்ஸ்.டி., எக்ஸ். இஸட். பிளஸ் மற்றும் எக்ஸ். இஸட்.பிளஸ் லக்ஸ் என நான்குவித வேரியன்ட்கள் இதில் வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.12.50 லட்சத்தி லிருந்து சுமார் ரூ.13.75 லட்சம் வரை உள்ளது.