< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிஸ்கா எஸ்.டபிள்யூ 300 போலார் ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

சிஸ்கா எஸ்.டபிள்யூ 300 போலார் ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
21 July 2022 9:55 PM IST

எல்.இ.டி. பல்புகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் சிஸ்கா நிறுவனம் தற்போது எஸ்.டபிள்யூ 300. போலார் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 1.32 அங்குல திரை உள்ளது. ஓட்டம், சைக்கிள் ஓட்டுவது, மலையேற்றம் உள்ளிட்ட 37 வகையான உடற்பயிற்சிகளில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் கணக்கிட்டு தெரிவிக்கும். ஸ்மார்ட்போனுக்கு வரும் செய்திகளை அறிவுறுத்துவது, ஸ்டாப் வாட்ச், கேமரா மற்றும் இசை கட்டுப்பாட்டு வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. 100 பாடல்கள் வரை இதில் பதிவு செய்து கேட்கும் அளவுக்கு 512 எம்.பி. நினைவகம் இதில் உள்ளது.

இதில் உள்ள பொத்தான், திரையில் தெரியும் தகவல் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளும் சோதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடிகாரத்தின் ஸ்டிராப்பின் உறுதித்தன்மையும் சோதிக்கப் பட்டுள்ளது. இதன் பேட்டரி 5 நாட்கள் வரை நீடித்திருக்கும். இதன் எடை 65 கிராம். கிரே, நீலம், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் வந்துள்ள இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.2,799.

மேலும் செய்திகள்