< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
மேம்படுத்தப்பட்ட ஆக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மான் ஸ்ட்ரீட்
|16 March 2023 7:54 PM IST
இருசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சுஸுகி நிறுவனம் தனது ஆக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மான் ஸ்ட்ரீட் மாடல் ஸ்கூட்டர்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.
இவை அனைத்தும் யூரோ 20 புகைவிதி சோதனைக்குட்பட்ட வகையிலான என்ஜினை (ஓ.பி.டி 2) கொண்டுள்ளது. 125 சி.சி. திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர்களில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு நிகழாத வகையில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன் படுத்தலாம். ஸ்கூட்டர் பிரிவில் இத்தகைய நுட்பம் கொண்ட ஸ்கூட்டர்களாக இவை திகழ்கின்றன.
ஆக்சஸ் 125 மாடல் ஸ்கூட்டரின் விற்பனையக விலை சுமார் ரூ.79,400 முதல் ஆரம்பமாகிறது. இதில் பிரீமியம் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.89,500. இதேபோல அவெனிஸ் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.92,000. பர்க்மான் ஸ்ட்ரீட் விற்பனையக விலை சுமார் ரூ.93,000 முதல் ரூ.97,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.