புதிய வண்ணங்களில் சுஸுகி ஆக்சஸ்
|மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சுஸுகியின் தயாரிப்புகளில் ஆக்சஸ் 125 மாடல் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றவையாகும்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கண்கவர் வண்ணங்களில் இவற்றை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐஸ் கிரீம் வண்ணம் மற்றும் முத்து போன்ற வெள்ளை நிறங்களில் இவை வந்துள்ளன. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பம் கொண்டது. மிகச் சிறந்த செயல்பாடு, எரிபொருள் சிக்கனம் இதன் சிறப்பம்சமாகும்.
இதில் சுஸுகி நிறுவனத்தின் ரைட் கனெக்ட் செயலி இணைப்பு வசதி உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மூலம் வாகனத்தின் செயல்பாடுகளை தீர்மானிக்கலாம். நேவிகேஷன் வசதி, செல்போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் அறிவுறுத்தல், பதில் அளிக்காத அழைப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வாகனத்தின் டிஜிட்டல் கன்சோலில் தெரியும். வரம்பு மீறிய வேக எச்சரிக்கை, ஸ்மார்ட்போனின் பேட்டரி நிலை உள்ளிட்டவற்றை இது உணர்த்தும்.
வெளிப்புறம் அமைந்துள்ள பெட்ரோல் டேங்க், சூப்பர் எல்.இ.டி. முகப்பு விளக்கு, ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. டிரம் பிரேக் மாடல் விலை சுமார் ரூ.85,200. டிஸ்க் பிரேக் மாடல் விலை சுமார் ரூ.87,200.