< Back
சிறப்புக் கட்டுரைகள்
சுயதொழிலில் ஆச்சரியப்படவைக்கும் தாய்-மகள்
சிறப்புக் கட்டுரைகள்

சுயதொழிலில் ஆச்சரியப்படவைக்கும் தாய்-மகள்

தினத்தந்தி
|
3 Jun 2022 8:28 PM IST

ஆன்லைனில் பரிசுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை தொடங்கி ஆண்டிற்கு இரண்டு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், நிஷா குப்தா.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த இவர், கடந்த 2017-ம் ஆண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை விற்பனை செய்யும் கடையைத் தொடங்கி நடத்தி வந்தார். இதனிடையே இவரின் மகள் வைஷாலியும், அவரது கல்லூரி நண்பரான அனில் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் நிஷா குப்தாவின் தொழிலுக்கு உதவுவதற்கு அவரது மகளும், மருமகனும் முன் வந்தனர். அதன்படி ஆலைனில் பரிசுப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் திட்டம் தொடங்கப்பட்டது.

உள்ளூர் கைவினைக் கலைஞர்களை ஒன்று சேர்த்து அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் 110 பரிசுப் பொருட்களுடன் தொழில் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 99 ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் விலை கொண்ட பரிசுப் பொருட்கள் உள்ளன.

இவர்களது நிறுவனத்தில் 12 நிரந்தர ஊழியர்களும், 40 பகுதி நேர தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். இந்நிறுவனம் ஆண்டிற்கு இரண்டு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்