< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்: 20 ஆயிரம் காலி பணி இடங்கள்
|25 Sept 2022 8:23 PM IST
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் குரூப் ‘பி’, குரூப் ‘சி’ பதவிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அனைத்து பதவிகளுக்கும் பட்டப்படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு கூடுதல் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குரூப் சி பணிகளுக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் பி பதவிகளை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
எழுத்து தேர்வு, கணினி இயக்க தெரிந்திருப்பது பற்றிய திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 8-10-2022. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.