< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
|22 Jan 2023 8:33 PM IST
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாதது), ஹவில்தார் உள்பட பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 11,409 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மல்டி டாஸ்கிங், ஹவில்தார் பணிகளுக்கு 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-2-2023.
மேலும் விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.